டிசம்பர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரசபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தத் விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமத்தின் கீழ் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் (FL4)nகாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
FL7 மற்றும் FL8 மதுபான உரிமங்களைக் கொண்ட சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் (3 நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்கள்) – காலை 10.00 முதல் அதிகாலை 2.00 மணி வரை
மற்ற அனைத்து ஹோட்டல்களும் – காலை 10.00 முதல் 12.00 வரை திறந்திருக்கும்.




