இந்தியாவில் முதல் முறையாக திருநங்கை தம்பதிக்கு குழந்தை பிறந்தது

Date:

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாவல் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளார். ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுதான்முதல் முறை” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருநங்கை தம்பதிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. திருநங்கைக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே இதுதான் முதல் முறை ஆகும்.

இதுகுறித்து ஜியா பாவல் நேற்று கூறும்போது, “ஜஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையும் ஜஹாத்தும் நலமாக உள்ளனர். என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்