யாழில் குழு மோதல்; காயமடைந்தவர்களை ஏற்றச்சென்ற அம்யூலன்ஸ் மீதும் தாக்குதல்: காடையர்கள் அட்டகாசம்!

Date:

யாழ். பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிா்காப்பு பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில் 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவா்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

இதன்போது அம்புலன்ஸ் வண்டியை வழிமறித்த காடையா்கள் அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வண்டியிலிருந்த உயிா்காப்பு பணியாளா்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனா். எனினும் அம்புலன்ஸ் வண்டி அங்கிருந்து நோயாளா்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்