பருத்தித்துறை நகைக்கள்ளர் சிக்கினர்!

Date:

ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளை பருத்தித்துறை பொலிசார் மீட்டுள்ளனர்.

புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொகக்கப் பணம் என்பன திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, நேற்று புதன்கிழமை (14) குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

விசாரணையின் பின்னர், இன்று(15) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்