மட்டில் 5 மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் ஆகஸ்ட் 4 வரை விளக்கமறியல்

Date:

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் இன்று  வெள்ளிக்கிழமை (24) காணொளி ஊடாக உத்தரவிட்டு தொடர்ந்து இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.

2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட  சம்பவங்களுடன்  தொடர்புபட்ட ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து  அவர்களை நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்டு  அவர்களை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (24) மட்டக்களப்;பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதவான்; எடுத்துக் கொண்டபோது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய இருவரும் திறந்த நீதிமன்றில் ஆஜர்படுத்திய சிஜடியினர் பிள்ளையானை நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாத பாதுகாப்பு காரணங்களை முன்வைத்ததுடன்

இந்த கொவைச் சம்பவங்களுடன் இராணுவ தகவல் பிரிவு மற்றும் சிவில்பாதுகாப்பு குழுக்கள் தொடர்பட்டுள்ளது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் சிஜடி யினர் சமர்பனம் செய்தனர்.

இதேவேளை பிள்ளையான் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி பிள்ளையானை மட்டு சிறைச்சாலையில் மாற்றுமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது முன்வைத்ததை கோரிக்கையை தொடர்பாக மீண்டும் முன்வைத்தாh.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த வழக்கை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேரையம் எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ்  பாய்ஸ்க்கு தொடர்ந்து  பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்