பிரபல ராப் பாடகர் ஆரோன் கார்ட்டர் சடலமாக மீட்பு!

Date:

அமெரிக்காவில் பிரபல ராப் இசை பாடகர் ஆரோன் கார்ட்டர் தனது 34 வயதில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரோன் கார்ட்டர் (34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும், 3 சகோதரிகளும் உள்ளனர்.

ஆரோன் தனது 9 வயதில் 1997ஆம் ஆண்டில் முதல் ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டார். 90களில் 4 இசை அல்பங்களை வெளியிட்டு புகழ் அடைந்தார்.

பேக்ஸ்ட்ரீட் போய்ஸ் என்ற ராப் இசை குழுவுடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றினார். இந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக் கார்ட்டர் உறுப்பினராக உள்ளார்.

என்றாலும், பிற்காலத்தில் போதைப்பாவனை மற்றும் சட்டச்சிக்கல்களுடன் போராடினார்.

இந்நிலையில், வேலி விஸ்டா டிரைவ் பகுதியில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

அவரது உடலுக்கு அருகில் மூன்று மருந்து மருந்துகளை பொலிசார் கண்டுபிடித்தனர். அவை ஓலான்சாபைன் (இது ஸ்கிசோஃப்ரினியா அல்லது இருமுனைக் கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது), அத்துடன் பதட்ட எதிர்ப்பு மருந்துகளான Xanax மற்றும் தசை தளர்த்தும் சைக்ளோபென்சாபிரைன் ஆகியவையே கண்டறியப்பட்டன.

அவரது சகோதரர் நிக் காட்டரும் பிரபல பொப் பாடகராவார்.

அவர்களின் சகோதரி லெஸ்லியும் 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார். போதைப்பொருள் பிரச்சனைகளாலேயே அவரும் உயிரிழந்தார். லெஸ்லி இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரை மறுவாழ்வுக்கு அனுப்புவது குறித்து அவரும் லெஸ்லியும் விவாதித்ததாகக் சகோதரர் நிக் கூறினார்.

ஆரோனுக்கு கடந்த காலங்களில் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இவருக்கு 1 வயதில் பிரின்ஸ் என்ற மகன் உள்ளார். போதை பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக ஆரோன் மற்றும் அவரது முன்னாள் மனைவியான மெலானி மார்ட்டின் ஆகியோர் தங்களது மகனை வளர்க்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் 2020 இல் மனைவி மெலானி கைதாகினார். பின்னர் அந்த தம்பதியினர் பிரிந்தனர்.

ஆரோனின் இறப்பு செய்தியறிந்து வீட்டிற்கு வந்த முன்னாள் மனைவி மெலானி கண்ணீர்விட்டு அழுதார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்