சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

Date:

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று (17.05) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரிய முறையில் அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபு படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே அதனை உத்தியோக பூர்வமாக கட்சி எடுத்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் அமைப்பு பேரவையில் அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்ப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக அவருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம்.

எனவே அந்த பதவியிலிருந்து கட்சியையும் சங்கடப்படுத்தாமல், அவரும் சங்கடப்படாமல் ராஜினாமா செய்யுமாறு கட்சியின் அரசியல் குழு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் அவர் இணங்காத காரணத்தினால் பாராளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து அவர் இறக்கப்பட்டார். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். இன்றைய கூட்டத்திலும் அந்த விடயம் பேசப்பட்டு இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அதற்கு இணங்கி இந்த தீர்மானத்தை நிறை வேற்றியிருக்கிறோம். அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கட்சியில் பதவி நிலையில் உள்ள மூவர் அதாவது தலைவர், நிர்வாக செயலாளர், பொருளாளர் ஆகியோர் இந்த விடயங்கள் உண்மையாக நடந்தனவா இல்லையா என்பது தொடர்பாக சிறிதரனுடனும் கலந்துபேசி ஆராய்ந்து, மத்திய செயற்குழுவிற்கு அறிவிப்பார்கள். ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. ஆனால் ஒரு இணக்கப்பாடாக இப்படி ஒரு பொறிமுறை ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழரசுகட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன் உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்