ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Date:

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் சொகுசு வாகனங்களை  முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச் செயலொன்றின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்கள் முடக்கப்பட்டது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவல பகுதியில் அமைந்துள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்றுள்ளது.

இருப்பினும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த அறிவித்தலை வழங்கச் சென்ற வேளையில், ரகித ராஜபக்ஷ வீட்டில் இருக்கவில்லை என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்