யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

Date:

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து  பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , குறித்த நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
spot_imgspot_img

More like this
Related

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு பிணை: ஆனாலும் சிறைவாசம் தொடரும்!

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03), சர்ச்சைக்குரிய 'கிரிஷ்'  பரிவர்த்தனை தொடர்பான...

TIN இலக்கத்திற்கு முண்டியடிக்கத் தேவையில்லை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மக்கள் வரி செலுத்துவோர்...

நவம்பரில் 3 எரிவாயு கப்பல்கள் வருகின்றன!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்