சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Date:

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். நசீல் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் தவிசாளர் குவாலிட்டி இன்ஜினியர் ஏ.ஜே.எம். சாதிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வு சம்மாந்துறை சதகா நலன்புரி நிதியத்தின் நிர்வாகத் தலைவர் ஏ.பி.எம்.றம்சீன் (காஷிஃபி) அவர்களின் வழிகாட்டலிலும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்நிகழ்வில் நிதியத்தின் பதில் தவிசாளரும் சுகாதார சமூக சேவை பணிப்பாளருமான  வைத்தியர் ஐ.எல்.எம்.றிஸ்வான், நிதியத்தின் சட்டப்பணிப்பாளரும், சட்ட ஆலோசகருமான சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம்.நவாஸ் ஏனைய பணிப்பாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சமூகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் அறிமுகக் காணொளி வெளியிடப்பட்டதுடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மற்றும் மனிதாபிமான சேவைகள் தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது. இது நிதியத்தின் சமூகப் பணிகளை தெளிவாக வெளிப்படுத்தியதாக பாராட்டப்பட்டது.

மேலும், நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் சேவைகள், நோக்கங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இணையதள வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒழுங்கமைப்புகள் களனிப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத் துறையில் முதுதத்துவமாணி பட்டப்பின் படிப்பை மேற்கொண்டு வரும் சம்மாந்துறை சிலியட் உயர்கல்வி நிறுவனத்தின் வருகைதரு விரிவுரையாளர் திருமதி.ஏ.எஸ்.எம்.றுமானா நவாஸ் அவர்களால் முழுக்க இலவசமாக வடிவமைக்கப்பட்டிருந்தமை இந்நிகழ்வின் விசேட அம்சமாகும். மேலும் இவ்விணையத்தளத்தின் தரவுப் பாவனைகள் தொடர்பிலும் றுமானா நவாஸ் அவர்களால் அதிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இணையத்தளத்தின் பல்வேறு அம்சங்கள் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. சமூக நலப்பணிகளை நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முக்கிய முன்னேற்றமாக இந்நிகழ்வு அமைந்ததுடன், எதிர்காலத்தில் சம்மாந்துறை மக்க

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்