2026-இல் உலகின் முன்னணி Wellness Destination ஆக இலங்கை முதலிடம்!
ஆரோக்கியம் மற்றும் மனநலத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் Top Trending Wellness Destination ஆக இலங்கை தேர்வாகியுள்ளது.
BookRetreats.com வெளியிட்ட State of Retreats 2026 அறிக்கையின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 1,040 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 49% பேர் இந்த ஆண்டு Wellness Retreat-களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். இது ஸ்பா சிகிச்சைகள், உணவுச் சேர்மங்கள் (Supplements) மற்றும் ஜிம் உறுப்பினர் சேவைகளை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், Global Wellness Institute கணிப்பின்படி, 2027 ஆம் ஆண்டளவில் உலகளாவிய Wellness Tourism சந்தை 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஏன் முதலிடத்தில்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆயுர்வேத மருத்துவ மரபு, மருத்துவர் மேற்பார்வையில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் இயற்கை சார்ந்த ஓய்வு அனுபவங்கள் இலங்கையை உலகளவில் தனித்துவப்படுத்துகின்றன.
மேலும், 3 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கும் Wellness Retreat-கள் சுமார் 372.18 அமெரிக்க டொலரிலிருந்து தொடங்குவதால், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை மலிவான மற்றும் தரமான தேர்வாக கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், 2026 மே 25 முதல் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணம் விலக்கப்பட்டுள்ளதால், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சுமார் 200 அமெரிக்க டொலர் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரு பருவமழை அமைப்புகள் காரணமாக ஆண்டு முழுவதும் ஒரு பகுதியாவது கடற்கரை சுற்றுலாவுக்கு ஏற்ற காலநிலை நிலவுகிறது. மேலும், காட்டு யானைகள், கடலில் காணப்படும் நீலத் திமிங்கலங்கள் போன்ற இயற்கை வளங்களும், யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளுடன் இணைந்த தனித்துவமான அனுபவத்தையும் வழங்குகின்றன.
ஆசியாவில் இடம்பெற்ற மற்ற நாடுகள்
2026 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் நேபாளம் ஆறாவது இடத்திலும் (52% வளர்ச்சி), தாய்லாந்து ஏழாவது இடத்திலும் (48% வளர்ச்சி) இடம்பெற்றுள்ளன.
நேபாளத்தில் யோகா மற்றும் மலை நடைபயணத்தை இணைத்த Retreat-கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. தாய்லாந்தில் பாரம்பரிய மருத்துவம், மசாஜ் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சுற்றுலா இணைந்த Wellness அனுபவங்கள் முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
2026-இன் Top Trending Wellness Destinations
- 🇱🇰 இலங்கை – +100%
- 🇦🇺 ஆஸ்திரேலியா – +85%
- 🇲🇦 மொராக்கோ – +83%
- 🏴 இங்கிலாந்து – +82%
- 🇪🇸 ஸ்பெயின் – +80%
- 🇳🇵 நேபாளம் – +52%
- 🇹🇭 தாய்லாந்து – +48%
- 🇲🇽 மெக்சிகோ – +44%
- 🇨🇷 கோஸ்டாரிகா – +42%
- 🇨🇦 கனடா – +36%




