டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் சிறப்பு நேர அட்டவணையின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேவைகள் சீராக மீளத் தொடங்குவதற்காக திருத்தப்பட்ட அட்டவணையின்படி ரயில்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, ரம்புக்கனை – நானுஓயா இடையிலான மலைநாட்டு ரயில் பாதையின் பல சேதமடைந்த பகுதிகளில் இன்னும் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதை முழுமையாக வழமையான நிலைக்கு கொண்டு வரப்படும் வரை மீதமுள்ள திருத்தப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




