கோட்டாபயவின் ரிட் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்திருந்த ரிட் மனு, நாளை (ஜூன் 18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இம்மனு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆதாரங்களுடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முறையாக அமைக்கப்படாத காரணத்தால் வழக்கு விசாரணை நடைபெறாமல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் தன்னை கைது செய்வதைத் தடுக்க நீதிமன்ற உத்தரவு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ச இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

22ஆம் திருத்தத்திற்கு பொதுவாக்கெடுப்பு தேவையில்லை, மூன்றில் இரண்டு பங்கு போதுமானது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது...

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்