தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

Date:

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21 ஆம் திகதி வரை மட்டுமே பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி பிறந்த ஆண் மற்றும் பெண் சிங்கக் குட்டிகள், பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தினமும் ஏராளமானோர் அவற்றைப் பார்வையிட மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருகின்றனர்.

எனினும், சிங்கக் குட்டிகள் வேகமாக வளர்ந்து வருவதால் அவற்றை பொதுமக்கள் பார்வைக்காக வெளியே கொண்டு வருவது சிரமமாகவும் பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானதாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூன் 21 ஆம் திகதிக்குப் பின்னர் அவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட மாட்டாது.

இதற்கிடையில், சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டுவதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவிலான பெயர் பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் பெயர்கள் தேஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெயர் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிகாரப்பூர்வ பெயரிடும் நிகழ்வில் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

சிங்கக் குட்டிகளை பார்வையிட விரும்புவோர் ஜூன் 21 க்குள் வருமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தற்போது அவை தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்