திருமண மண்டபத்தில் மோதல்

Date:

கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின்போது மதுபோதையில் இருந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

எனினும், கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிலர் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸார்மீது தாக்குதல் நடத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்