சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கு தொடர்​பான ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்​தக் கோரி நோட்டீஸ்!

Date:

சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கை மைய​மாக வைத்து உரு​வாகும் ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்​தக் கோரி அப்​படத்​தின் தயாரிப்​பாள​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரில் 2 அரியவகை மான்​களை, சல்​மான் கான் வேட்​டை​யாடிய​தாகத் தொடரப்பட்ட வழக்​கில் அவருக்கு 5 ஆண்டு சிறைடத தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இத்​தண்​டனைக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்யப் பட்டு வழக்கு நடந்து வரு​கிறது. சர்ச்​சைக்​குரிய இச்சம்பவத்​தின் பின்​னணி​யில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்​படம் உரு​வாகிறது. இப்​படத்​தின் அதி​காரப்​பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்​டர் சமீபத்​தில் வெளி​யிடப்​பட்​டது. இதன் டீஸர் ஜூன் 20-ல் வெளி​யாக இருக்​கிறது.

இந்த வேட்டை விவ​காரத்​தால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்​மான் கானுக்கு கொலை மிரட்​டல்​கள் வந்​து​ கொண்​டிருக்​கும் சூழ்​நிலை​யில், இந்​தப் ​படம் குறித்த அறி​விப்பு பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் தயாரிப்பு மற்​றும் விளம்​பரப் பணி​களை உடனடி​யாக நிறுத்​து​மாறு சல்மான் கான் தரப்​பில் இருந்து ‘காலா ஹிரன்’ தயாரிப்​பாள​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. “இந்​தப்​படம் சல்​மான் கானின் நற்​பெயரைக் கெடுக்​கும் வகை​யிலும், அவரது தனிப்​பட்ட உரிமை​களை மீறும் வகை​யிலும் உரு​வாக்​கப்​படு​கிறது” என நோட்​டீஸில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள...

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்