முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ஷ காலமானார்.
காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர், ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் தாயாரும் ஆவார்.
சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற சபாநாயகராகவும் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளிலும் பணியாற்றிய ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார்.




