வரவு செலவு திட்டத்தில் கிழக்கிற்கு 2 பில்லியன் ஒதுக்கீடு ஒரு மோசமானது கிழக்கு நா.உ. இது தொடர்பாக கதைபதில்லை—நா.உ இரா.அருச்சுனா குற்றச்சாட்டு

Date:

இந்த வரவு செலவு திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு மட்டும் 30 பில்லின் ஒதுக்கியதுடன் கிழக்கிற்கு  2 பில்லியன் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு மோசமானது இது தொடர்பாக கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைப்பதில்லை இது கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு இது மூன்றாவது தடவையாக வந்துள்ளேன் வரவு செலவு திட்டத்தை பார்க்கின்ற போது வடக்கு கிழக்கு என பார்க்க வேண்டும் இதில் 30 பில்லியன் வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்திற்கு 2 பில்லியன் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது 2026 ம் ஆண்டின் வரவு செலவு திட்ட அறிக்கையில் கிழக்குக்கு இந்தியா அபிவிருத்தி செய்யும் என மட்டும் என வசனம் மட்டும் இருந்தது

இந்த வருடம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில்  தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்களுக்கு என்ன கொடுத்தனர் என பேசினேன் இருந்த போதும் வடக்கிற்கு 2026 ஆண்டிற்கு 25 பில்லியன் ஒதுக்கப்பட்டது 2027 ஆண்டு 30 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த வருடம் கிழக்கு மாகாணத்திற்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பதுடன் கிழக்கு மாகாணத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என ஞா.சிறினேசன், வைத்தியர் சிறிநாத், கோடீஸ்வரன் ஆக இருக்கலாம் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு என்ன ஒதுக்கப்பட்டிருக்கிறது என கதைப்பதில்லை

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் ஒரே கலவரங்களாக இருக்கும் அதற்கு காரணம் இந்த வருடம் எவ்வளவு ஒதுக்கப்பட்டிருக்கிறது என பொய் சொன்னதின் பின்னர் நான் ஒவ்வொரு வருடமும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஒதுக்கிய பணத்திற்கு என்ன நடந்துள்ளது என பல கேள்விகளை கேட்கிறேன் ஆனால் கிழக்கு மாகாணத்தில் அப்படி கேட்பதை நான் காணவில்லை

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் எத்தனை வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக இந்த வரவு செலவு திட்டத்தில் குடிநீருக்காக 79 பில்லியன்  அதில் வடமாகாணத்தில் குடிநீருக்காக 4 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது

இலங்கையில் வடக்கு கிழக்கில் மட்டும் தான் குடிநீர் பிரச்சனை ஏனைய பகுதியில் குடிநீர் பிரச்சனை இல்லை எனவே வடக்கு கிழக்கில் 20 பில்லியன் குடிநீருக்காக ஒதுக்க வேண்டும் மற்றைய இடங்களில் 3 பில்லியனை ஒதுக்க வேண்டும் ஆனால் மாறி 4.5 வீதம் வடக்கிற்கு ஒதுக்கியுள்ளனர் கிழக்கிற்கு ஒதுக்கியதை காணவில்லை எனவே அப்படியான விடயத்தை இந்து வரவு செலவு 3 வது வாசிப்பான அமைச்சரவை வாசிப்பில் கிழக்கு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது வாசிக்க வேண்டும்

வெல்லாவெளி பிரதேச செயலாளர் தொடர்பில் அந்த பகுதி வயதான பெண் ஒருவர் முறைப்பாடு ஒன்றை தந்தார் இதில் ஜனாதிபதி காரியாலயம் வரை முறைப்பாடு சென்று அதனை பார்க்குமாறு கடிதம் வந்தும் அதை பிரதேச செயலாளர் பார்க்கவில்லை தனது 2 ஏக்கர் காணி ஒன்றை வேறு ஒருவருக்கு எழுதி கொடுத்ததாகவும் தான் போக 5 இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டதாக பாதிக்கப்பட்ட அந்த  வயதான பெண் அழுது முறைப்பாடு தந்துள்ளார்.

வடக்கில் இருந்து எமது மக்கள் சாணக்கியன் ஒருக்கால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது பாத்துவிடுங்கோ என அழ மாட்டார்கள் ஏன் என்றால் கிழக்கில் சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வி கேட்க முடியாது காரணம் 600 மில்லியன் அவருடைய தந்தையின் பெயரில்  இடம் பெற்ற மோசடி தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ததன் பின்னர் நாய்க்கு பிஸ்கட் போடப்பட்ட மாதிரி அவர் அடங்கியிருக்கின்றர்.

எனவே உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுடைய பிரச்சனையை கதைக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லை  அதேவேளை மட்டக்களப்பில் என்ன அபிவிருத்தி நடைபெறுகிறது என வெளியில் நடைபெறுகின்றது என உங்கள்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிவு இருக்க வேண்டும் அதேபோல மட்டு அம்பாறையில் இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை வீதம் ஒதுக்கிய நிதியை பாவிக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும் எனவே இந்த வரவு செலவு திட்டத்தை பொறுத்தமட்டில் தமிழர்களுக்கு மோசமான வரவு செலவு திட்டம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

பூஸா பகுதியின் மலிதுவவில், சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் நேற்று காலை...

கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான...

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்