மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் தமிழரசு கட்சி 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வரவு செலவு திட்ட விவாதத்தின் போது வெளிநடப்பு செய்தால் இந்த மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு தீர்வு கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலுக்கு பாவிப்பதாக நூறுவீதம் சந்தேகம் இல்லை ஏன் என்றால் தமிழரசு கட்சி 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் இந்த 8 பேரும் இந்த பட்ஜெட்டை விட்டு ஒரு அடையாள வெளிநடப்பு செய்தால் இந்த மேய்ச்சல் தரை விடையம் முடியும்.
ஆனால் அடையாள வெளிநடப்பு செய்தால் தனிப்பட்ட ரீதியில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர்கள் இடமாற்றம் அதிபர் ஆசிரியர் இடமாற்றம் கேட்க முடியாது இதன் காரணமாக அடையாள வெளிநடப்பு செய்ய மாட்டார்கள்.
இந்த மயிலத்தமடு மாதவனை பிரச்சனை தொடர்பாக இவர்கள் அரசியல் ரீதியாக அணுக தெரியாது இருக்கின்றனர். எனவே அரசியல் மேடையில் கதைத்தால் தான் அங்கு வலித்தால் தான் வேலை நடக்கும் இந்த முறை வடக்கிற்கு ஜனாதிபதி 30 பில்லியன் வழங்கியிருக்கிறார்.
எனவே இந்த மேய்ச்சல் தரை விவகாரம் வெறுமனவே எழுதிக் கொண்டு வந்து வாசிக்கின்ற பிரச்சனையாக மட்டுமே போய்க் கொண்டிருக்கிறது இது உணர்ச்சி பூர்வமாக அருக்கப்படவேண்டும்.
தமிழரசுக் கட்சி திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார் அவர் ஏன் இருக்கின்றார் என அவருக்கும் தெரியாது எங்களுக்கும் தெரியாது எனவே திருகோணமலையில் ஒட்டு மொத்த தமிழ் குரல் பாராளுமன்றத்தில் தூங்குகின்றது என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது அவ்வாறே மட்டகளப்பின் ஒட்டுமொத்த தமிழ் குரல்களும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை அமைச்சர்களுடன் பின்கதவால் கதைப்பது உங்கள் ஒருவருக்கும் தெரியாது.
எனவே நாங்கள் எப்போது எமது இனத்திற்கு உண்மையாக இருக்கின்றோம் அப்போது தான் இன்னொரு இனம் எங்களை மதிக்கும் ஆகவே சிங்கள ஊடகங்களுக்கு சிறிநாத், சிறிநேசன் தெரியாது எனவே எங்கள் வலிகளை சிங்களவர்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும்
மயிலத்தமடு வில் அத்துமீறி குடியேறி இருப்பவர்கள் சிங்களவர்கள் இந்த விடயங்களை சிங்கள ஊடகங்களுக்கு கொண்டு போகும் போது தான் அந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரரை அங்கிருந்து வெளியேற்ற முடியும் இந்த அரசியலை விளங்கி கொள்ள வேண்டும்
வடக்கும் கிழக்கும் இருக்கும் கேவலமான நிலைமை நாட்டில் எந்த மாவட்டதிலும் இல்லை எனவே தமிழ் மக்கள் ஒரு புத்தியுள்ள முதுகெலும்புள்ள ஒருவரிடம் கை நீட்டி பிச்சை எடுக்காத ஒரு நல்ல அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் அனுப்ப வேண்டும் என்றார்.




