கொக்கட்டி;சோலையில் தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு; மாவீரர்களின் பெற்றேரை கௌரவிப்பு- கதறியளது கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு; மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட  புகைப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிந்து மலர் தூவி கண்ணீர் மல்க  அஞ்சலி செலுத்தினர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சழுக செயற்பாட்டாளர்  போதகர் எஸ். லூக் ஜோன் கட்சி மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமரராஜா உட்பட கட்சி ஆதரவாளர்கள் மாவீரர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்

இதன் போது மகிழடித்தீவு சந்தியில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படத்தை தாங்கியவாறு மேள தாளத்துடன் அணிவகுத்து நடைபவணியாக கலாச்சார மண்டபம் வரை  சென்று பொது சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி சுடர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி  செலுத்தி கண்ணீர்மல்க கதறியழுது அஞ்சலி செலுத்தினர்

spot_imgspot_img

More like this
Related

கௌரவத்திற்காக எழுந்து நின்ற பல்கலைக்கழக வேந்தர்! ருஹுண பல்கலைக்கழகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி!

பொதுவாக, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் வேந்தர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே மாணவர்களுக்குப்...

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய கோர விபத்து- 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்