முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச நிதி செலவிடப்பட்ட நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்காக ரூ.34 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ திட்டத்திற்காக ரூ.6,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த காலங்களைப் போன்று ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்காக தற்போதைய ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




