யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

Date:

யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை – பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவர் தேங்காய்த் துருவியால் தலையில் அடிக்கப்பட்டுப் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன், எதிராளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

ருவான்வெலி மகா சேய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்