ஒன்றரை வருடங்களாக நட்டத்தில் இயங்கும் கரைச்சி  தெற்கு பல நோக்குகூட்டுறவுச் சங்கம்

Date:

கிளிநொச்சியில் முக்கியமான கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாக
காணப்படுகின்ற கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் கடந்த
ஒன்றரை வருடங்களாக நட்டத்தில் இயங்கி வருகின்றது. அதன் கணக்கறிக்கைகள்
மூலம் தெரிய வந்துள்ளன.

இக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த கணக்கறிக்கையில் தேறிய நட்டமாக
சுமார் மூன்று தொடக்கம் ஐந்து இலட்சடம் வரை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி
மாவட்டத்தில் கடந்த காலங்களில் சிறப்பாக சிறப்பாக செயற்பட்ட கூட்டுறவுச்
சங்கமாக கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் காணப்பட்டு
வந்தது.இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இச் சங்கம் நட்டத்தில்
இயங்குவது பணியாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுகைச் சபையின் தவறான தீர்மானங்கள்,
முடிவுகளே இதற்கு காரணம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். யுத்தத்திற்கு
பின்னர் மீளவும் சங்கத்தை இயங்க வைப்பதற்காக அதன் பணியாளர் பலர் பல
அர்ப்பணிப்புக்களை செய்திரகின்றனர். சில பணியாளர் தங்களது நகைகளை கூட
அடகு வைத்து சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறப்பதற்கும்
உதவியிருகின்றனர். எனவே இவ்வாறு செயற்பாடுகளை ஆரம்பித்து வளர்ந்து வந்த
சங்கத்தின் நிலைமை தற்போது கவலைக்குரியதாக காணப்படுகிறது.

நீண்ட அனுபவமும், அர்ப்பணிப்பும் மிக்க பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு
புதிது புதிதாக பணியாளர்களை விதி முறைகளுக்கு மாறாக ஆட்சேர்ப்பு
செய்தல், கொள்வனவு நடைமுறைகள் சந்தையின் நிலைமைகளை அறியாது தீர்மானங்களை
மேற்கொள்ளல், உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் சங்கம் இந்த நிலையினை
அடைந்துள்ளது என பணியாளர் கவலை தெரிவித்துள்ளதோடு, மாகாண கூட்டுறவுத்
திணைக்களம் தலையிட்டு உரிய சீராக்கல் நடவடிக்கையினை மேற்கொண்டு
பாரம்பரியம் மிக்க கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தை
காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்