சுன்னாகம்- புத்தூர் வீதி மூடல்

Date:

யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார்.

சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த ரயில்வே கடவை இன்று காலை 7.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் போக்குவரத்துக்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில்,...

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...

யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை!

நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்