யாழ் பல்கலை கலைப்பீடாதிபதியாக பிரதீபராஜா தெரிவு!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீடச் சபை சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக – திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 2026 /2 கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இன்றைய தெரிவின் போது, கலைப் பீடச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்