ஈரான் IRGC பிரிவின் உயர் தளபதிகள் பலர் பலி

Date:

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) உள்ள பல ஈரானிய உயர் தளபதிகள் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய செய்தி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதில், IRGC செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனியும் கொல்லப்பட்டார்.

“அமெரிக்க-சியோனிசத் தரப்பால் விடியற்காலையில் நடத்தப்பட்ட குற்றவியல் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி வீரமரணம் அடைந்தார்,” என்று IRGC தனது செபா நியூஸ் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், IRGC-யின் விமானப் படைத் தளபதியான மெஹ்தி குரைஷி, இஸ்பஹானில் நடந்த இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவும், பசிஜ் உளவுப் பிரிவின் தளபதியான ஜெனரல் இஸ்மாயில் அஹ்மதி, வியாழக்கிழமை நடந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் பெயர் குறிப்பிடப்படாத மேலும் மூன்று பேருடன் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. அரசாங்கப் பிரமுகர்களுடன், ஐ.ஆர்.ஜி.சி, இராணுவம் மற்றும் பசிஜ் படையின் உயர் மட்டத் தளபதிகளும் இதன் முக்கிய இலக்குகளில் அடங்குவர்.

தாக்குதல்கள் தொடங்கிய முதல் நாளிலேயே, உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்