இந்தியா மீதான வரி வீதிப்பு-அமெரிக்காவின் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

Date:

ரஷ்ய எண்ணெய் கொள்வனவில் இருந்து பின்வாங்க இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரிகள் இன்று (27) அமுலுக்கு வந்தன.

இது இந்தியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியது.

அதிக வரிகள் பல்வேறு துறைகளில் ஏற்றுமதியாளர்களை பாதிக்கும் என்றும், வளர்ச்சி வாய்ப்புகளை குறைக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

அமெரிக்க வரிகள் 60.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதியை பாதிக்கும்.

ஆடை, இரத்தினக் கற்கள், நகைகள், இறால், கம்பளங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த துறைகளில் ஏற்றுமதி 70% வரை குறையக்கூடும்.

இது மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (GTRI) தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வரிகள் தொடர்ந்தால், அடுத்த ஆண்டு ஏற்றுமதிகள் $49.6 பில்லியனாகக் குறையக்கூடும். சீனா, வியட்நாம் மற்றும் மெக்சிகோ போன்ற போட்டியாளர்கள் அமெரிக்க சந்தையில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்