டிப்பருடன் மோதிய வான்-பாடசாலை சிறுவர்கள் உயிரிழப்பு.

Date:

இன்று (27) காலை குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகள் மற்றும் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்இ படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காயமடைந்த இரண்டு மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மீதமுள்ள எட்டு மாணவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளியாப்பிட்டிய, பல்லேவெல, விலபொல பாலத்திற்கு அருகில் இன்று காலை 07.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி, 15 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் வேனின் சாரதி மற்றும் 12, 13 வயதுடைய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மீதமுள்ள மாணவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்