Pagetamil
இலங்கை

பேருந்தில் பயணப்பையிலிருந்து 123 தோட்டக்கள் மீட்பு

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்ட பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோட்டக்கள் சிறிய இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்று (22) பிற்பகல் பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இச் சோதனையின்போது, 123 செயற்படக்கூடிய தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தோட்டக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், 9 T56 ரக தோட்டாக்கள் மற்றும் T56 LMG தோட்டா ஒன்றும் அடையாளம் காணப்பட்டன.

சந்தேகத்திற்குரிய எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பண்டாரவளை காவல்துறையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment