வந்தாறுமூலையில் விபத்து

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பேருந்து வண்டியும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் போக்குவரத்து பஸ் வண்டியும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச் சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதி பாதசாரிகள் வீதியை கடக்கும் வெள்ளை கோட்டு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது

இதில் பஸ் வண்டி நடத்துனர் மற்றும் பஸ் வண்டியில் பிரயாணிகள் லொறியில் சென்றவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்களை சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்