புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வந்த பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதிஅமைச்சர் சுனில் வட்டகல, தனது வாகனத்தை வரவழைக்கும்போது தனது ஓட்டுநரை ‘புருவா’ (கழுதை) என்று அழைத்துள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதிஅமைச்சர் நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் இருந்தார்.
வருகையின் போது, பல பத்திரிகையாளர்கள் அவரிடம் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர். பதிலளிப்பதற்குப் பதிலாக, பிரதி அமைச்சர் தொலைபேசியில் சாரதியை அழைத்து, சத்தமாக, “புருவோ, வாரேன்” (கழுதை, இங்கே வா) என்று கூப்பிட்டார்.
அதே வீடியோவில், மற்றொரு நபர் பிரதி அமைச்சரின் வாகனத்தை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு ஒருவருக்கு அறிவுறுத்துவது கேட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1