நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை (Online Safety) காப்புச்சட்டத்தில் சில முக்கியமான திருத்தங்களை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
இந்த சட்டம் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சட்ட திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எதிர்வரும் நாட்களில் வெளிவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




