[embedyt] https://www.youtube.com/watch?v=isSV05j_GP8[/embedyt]
பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற நிகழ்வுகளில், எம்.பி. அர்ச்சுனா சபாநாயகர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அர்ச்சுனா, சபாநாயகரை எழுத்துமூல கோரிக்கை விடுத்து, தன்னை பொலிஸ் காவலில் வைக்குமாறு கோரியதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து, அவர் சபாநாயகரை கடுமையாக சாடினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுந்து நின்று, நாட்டில் இனப் பிரிவினை இல்லை என்றும், இத்தகைய நேரத்தில் ஆங்கிலத்தில் பேசி தவறான கருத்தைப் பரப்புவது அர்ச்சுனாவுக்கு மனப் பிரச்சினை என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், பொலிஸார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் சட்டத்தை மதிக்குமாறு அர்ச்சுனாவிடம் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, எம்.பி. அர்ச்சுனா சபாநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். இதனைத் தொடர்ந்து, அவைத்தலைவர், அர்ச்சுனா சிறப்புரிமைக் கேள்விகளைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பேச முயற்சிக்கின்றார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகள் பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




