இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா உடல்நலக் குறைவால் இன்று (28) அதிகாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



