கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம்
வல்வெட்டி நலன்புரிச் சங்கம் கனடா மற்றும் நிழல்கள் அமைப்பு கனடா
ஆகியவற்றின் நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்படட 100 பயனாளிகளுக்கு
பொங்கல் பானைகள் வழங்கி வைத்துள்ளனர்.
நேற்று ( 10) மாவட்ட வைத்தியசாலை இளைப்பாறும மண்டபத்தில் நோயாளர்
நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க. விஜயசேகரம் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் பிரபாத் வீரவத்த
மற்றும் வை த்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், நோயாளர் நலன்புரிச்
சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




