அனுர அரசு இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்

Date:

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் அவர்களின் இலக்கை அடையும் புதுவருடமாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு காலடி எடுத்து வைக்கின்றோம்.

இலங்கை நாட்டில் வருமானம் தரக்கூடிய பொருளாதாரம் எவையும் இல்லை. பொருந்தோட்ட பொருளாதாரமும் இல்லை. சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டும் தான் பார்த்திருக்கிறார்கள்.

இலங்கை உலக நாடுகள் மற்றும் நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை கட்டுவதென்றால் உடனடி வழிமுறை கூட இல்லை. நெல் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை. இலங்கை அரசாங்கம் கிளீன் சிறிலங்கா போன்று புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கும் கிளீன் திட்டத்தை கொண்டு வருவார்களாக இருந்தால் உலகத்திலுள்ள தமிழர்களின் நிதியுடன் வடக்கு கிழக்கில் புதிய அபிவிருத்தியை அரசாங்கம் உருவாக்க தயார்.

ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்ச்சாலைகள் இன்னும் இயங்க முடியாது உள்ளது. இவற்றை இயக்குவதற்கான பண பலத்தை உலகத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

என்னதான் இருந்தாலும் 80 ஆண்டுகளாகவுள்ள இனப்பிரச்சனைக்கு இதயசுத்தியுடன் ஒரு பிரச்சனையை அடையாளம் காண்பார்களாயின் அதிலும் இந்த அரசு இதை காணுமாயின் அது ஒரு புதிய மாற்றத்தை இலங்கைக்கு கொடுக்கும் சிங்கள மதகுமார்களிடமும் சிங்கள மக்களிடமும் தற்போதும் இனப்பிரச்சனை விடயத்தில் பெளத்த இதிகாசங்களோடே வாழ்கின்றனர்.

இவற்றிலிருந்து வெளியே வரவேண்டும் பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும். எப்பொழுதும் சமாதானமாக பேசுவதற்கு எங்களுடைய சமாதான கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்