வரும் மாதம் 17ம் திகதி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி 18 தொடக்கம் மார்ச் 21 வரையுள்ள 26 நாட்களுக்கு இவ் வரவு செலவு குறித்த விவாதத்தை நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை (நான்கு சனிக்கிழமைகள் உட்பட) நடைபெற உள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இறுதி முடிவுகள், நாட்டின் எதிர்கால நிதி நிர்வாகத்தை தீர்மானிக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு, இந்த விவாதங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




