விருட்சத்தின் வாசகர் வட்ட கலந்துரையாடல்

Date:

நேற்றைய தினம் (21.12.2024 – சனிக்கிழமை) மாலை 5.00 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள தளம் அலுவலகத்தில் “விருட்சம்” மாத இதழின் வாசகர் வட்ட கலந்துரையாடல் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு, 6.15 மணியளவில் நிறைவடைந்தது.

இந் நிகழ்வில், இதழின் ஆசிரியர் குழாம், ஆர்வலர்கள் மற்றும் திருக்கோணமலையைச் சேர்ந்த இலக்கியவாதிகள் கலந்து கொண்டு, இவ் இதழ் சார் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், எதிர்கால செயற்பாடுகளுக்கான மேலதிக நோக்கங்களையும் வழிமுறைகளையும் விவாதித்தனர்.

இந் நிகழ்வை தொடர்ந்து, தளம் அமைப்பினால் திறன்விருத்தி சார்ந்து மேற்கொள்ளப்பட்ட பயிற்சிநெறிகளில் பங்குகொண்டு தமது திறனை வளர்த்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டு, இன்றைய நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

திருகோணமலை மண்ணிலிருந்து சுதேச வெளியீடு இன்மை என்ற இடைவெளியை நிரப்பும் நோக்குடன் 2024ம் ஆண்டு முதல் தளம் அமைப்பின் ஆதரவுடன் முற்றுமுழுதாக இளையோரின் கைவண்ணத்தில் “விருட்சம் மாத இதழ்” E – இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

மேலும், விருட்சம், கிளை – 2024, தளை – 01 இல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தளை – 10வது இதழையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்