தேயிலைத் தோட்டத்துக்குள் பாய்ந்த கார்

Date:

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி கீழுள்ள தேயிலை தோட்டத்திற்குள் உருண்டு விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்திக்கு அருகாமையில் கொழும்பு பக்கமாக 200 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த கார் ஒன்றே இவ்வாறு இன்று (29) அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எவருக்குக காயம் எதுவும் ஏற்டவில்லை என்றும் கார் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த மலையக பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான வழக்கு: மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினர்

திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும்...

திருமண மண்டபத்தில் மோதல்

கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட...

அமெரிக்க கடற்படை முற்றுகை தளர்ந்தது: ஈரானின் எண்ணெய் வர்த்தகம் ஆரம்பம்!

ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்ற முதல் எண்ணெய்க் கப்பல்கள், ஹோர்முஸ் ஜலசந்தியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்