26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் விபரம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் இறுதியாகியுள்ளது.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. வி.மணிவண்ணனுக்கு முன்னுரிமையளிப்பதாக தெரிவித்து, அந்த கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கி விட்டனர்.

இதை தொடர்ந்து, வி.மணிவண்ணன் தரப்பே, வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

கட்சியின் வேட்பாளர் பட்டியலில், வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய்- விளையாட்டு உத்தியோகத்தர்), உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக்கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

ஐ.தே.கவின் பொதுச்செயலாளரானார் தலதா!

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment