சஜித்திற்கு உயிரச்சுறுத்தல் இல்லாததால் மேலதிக பாதுகாப்பு நீக்கம்!

Date:

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திரும்பப் பெறப்பட்டதாக சஜித் தெரிவித்திருந்தது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தல்துவ தெரிவித்துள்ளார். ஆனால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், போதியளவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்