முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவும், ஹொரானாவுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் காவலில் எடுக்கப்பட்டனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர் ஹரக் கட்டாவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவலில் இருந்து விடுவித்து, அவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்றி, குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு இலஞ்சம் வழங்கி, அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்காக 1200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கிய சம்பவம் தொடர்பில் இந்த கைதுகள் நடந்துள்ளன.




