சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை

Date:

மகா​ராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்​குநர் கேதன் விஷால் அகர்​வால்​(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டது.

ஆனால் இவருக்கு இந்த திரு​மணத்​தில் விருப்​பம் இல்​லை. தனது காதலன் சேத்​தன் சவுத்ரி (22) என்​பவரை திரு​மணம் செய்ய விரும்பி​யுள்​ளார். பெற்​றோர் வற்​புறுத்​தல் காரண​மாக கேதன் விஷாலுடன் நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றுள்​ளது. இதனால் கேதன் விஷாலை கொலை செய்ய முடிவு செய்​தார். தங்​கள் பகு​தி​யில் உள்ள லோகா​காட் கோட்​டைக்கு அழைத்​துச் சென்று மலை உச்சியில் இருந்து கேதனை தள்ளி கொலை செய்ய முடிவு செய்தார்.

இவர்​கள் லோகா​காட் கோட்​டைக்கு கடந்த மே 31, ஜுன் 14 மற்​றும் 18ம் தேதி​களில் மலை​யேற்​றத்​துக்கு சென்​றுள்​ளனர். ஜுன் 14ம் தேதியே கேதனை பள்​ளத்​தில் தள்​ளி​விட முயன்​றுள்​ளார். ஆனால் அரு​கில் உள்ள புதரைப் பிடித்து கேதன் தப்​பித்​தார். அப்​போது பாம்பு ஒன்று வந்​த​தாக கூறி சியா, கேதனை ஏமாற்​றி​யுள்​ளார்.

மூன்​றாவது முறை​யாக கடந்த 18ம் தேதி தனது காதலனை பின் தொடர்ந்து வரச் செய்து இரு​வரும் சேர்ந்து கேதனை பள்​ளத்​தில் தள்ளி கொலை செய்​துள்​ளனர். மலை உச்​சி​யில் போட்டோ எடுக்க முயன்​ற​போது, கேதன் தவறி விழுந்​த​தாக சியா கூறிய​தால், இது தற்​செயல் விபத்​தாக வழக்​குப்​ ப​திவு செய்​யப்​பட்​டது. கேதன் இறந்த 4 நாள் கழித்து அவரது வீட்​டுக்கு இரங்​கல் தெரிவிக்க சியா சென்​றார்.

அப்​போது கேதன் எப்​படி பள்​ளத்​தில் விழுந்​தார் என அவரது சகோதரி சியா​விடம் பல கேள்வி​கள் எழுப்​பி​னார். இதில் சியா அளித்த பதில்​கள் முன்​னுக்கு பின் முரண​ாக இருந்​த​தால் அவர் மீது கேதன் சகோ​தரிக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. இதை அவர் தனது குடும்​பத்​தா​ரிடம் தெரிவிக்க, அவர்​கள் போலீ​ஸாரிடம் கேதன் மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக தெரி​வித்​தனர். இதையடுத்​து​தான் போலீ​ஸார் வேறு கோணத்​தில் தங்​கள் விசா​ரணையை தொடங்​கினர்.

சியா​வுக்கு சேத்​தன் என்​பவருடன் தொடர்பு இருந்​தது தெரியவர அவர்​களது போன் அழைப்​பு​களை போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். இதில் இந்த ஆண்​டில் மட்​டும் இரு​வரும் 2,004 முறை மொத்​தம் 238 மணி நேரம் பேசி​யுள்​ளனர். விபத்து நடந்த பகு​தி​யில் சிசிடிவி கேமி​ராக்​களை ஆய்வு செய்​த​போது, தலையை மறைக்​கும் ஹுடி சட்டை அணிந்த நபர், கேத்​தன் மற்​றும் சியா ஆகியோர் சென்ற வாக​னத்தை பின்​ தொடர்ந்​தது தெரிய​வந்​தது. ஜுன் மாதம் கொளுத்​தும் வெயி​லில் இவர் தலையை மறைக்​கும் உடை​யுடன் சென்​றது போலீ​ஸாரின் சந்​தேகத்தை வலு​வடையச் செய்​தது.

மேல் விசா​ரணை​யில் அவர் ஷியா​வின் காதலன் சேத்​தன் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. அடுத்​த கட்​ட​மாக நடை​பெற்ற விசாரணையில்​ தான் கேதனை இரு​வரும் 350 அடி ஆழ பள்ளத்தாக்​கில் தள்ளி கொலை செய்​ததை ஒப்​புக் கொண்​டனர். கேதனின் சகோ​தரிக்கு மட்​டும் சியா மீது சந்​தேகம் எழவில்லை என்​றால், இந்த திட்​ட​மிட்​ட கொலை சம்​பவம்​, தற்​செயல்​ விபத்தாகவே முடிந்​திருக்​கும்​.

spot_imgspot_img

More like this
Related

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” – விஜய்யின் குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும்...

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25)...

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்