நோர்வேயிலிருந்து வந்து திருகோணமலையில் தற்கொலை செய்த இளம்பெண்!

Date:

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் இன்று (25) பிற்பகல் குடும்பத்தினர் வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யுவதி 2023 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு பிரஜை இலங்கைக்கு வந்து திருகோணமலையில் திருமணம் ஆகிய நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் வரோதய நகர் பிரதேசத்தைச் சேர்ந்த ரினா ஸ்ரீலா (வயது-32) இவருக்கு 4மாத குழந்தை ஒன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்