மருமனுடன் குடும்பம் நடத்தும் மாமியார்: மீட்டுத்தரக்கோரி கணவர் புகார்!

Date:

மருமகனிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி மாமனார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார்.

அந்த மனுவில், “எனக்கு திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். இந்த நிலையில் மருமகன் எனது மகளை வீட்டில் விட்டு விட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் எனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

எனது மனைவியை என்னுடன் சேர்ந்து வாழ அழைத்தால் அவர் வர மறுக்கிறார். என் மனைவியை வீட்டுக்கு அனுப்புமாறு மருமகனிடம் கூறினால் அவர் அனுப்ப மறுக்கிறார். மேலும் எனது கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதற்கு மருமகனின் பெற்றோர் உடந்தையாக உள்ளனர். மருமகனிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்