டயானா தலைமறைவு

Date:

குடிவரவு சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபரை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில், அவரை சந்தேக நபராக பெயரிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் டயானா கமகேவை சந்தேகநபராகப் பெயரிட்ட நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆட்கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்து, சந்தேகநபரை கைது செய்வதற்காக சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற போதும் அவர் அங்கு இல்லை எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்து கொழும்பு பிரதான நீதவான் கடந்த மே மாதம் 9ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்