நெடுந்தீவிலிருந்து மாடுகள் கடத்தி வந்தவர்கள் சிக்கினர்!

Date:

நெடுந்தீவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த லொறி ஒன்றினை இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றியதோடு குறித்த லொறியில் இருந்து 10 மாடுகளை மீட்டுள்ளனர்.

நெடுந்தீவில் இருந்து 20 மாடுகள்  சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் நோக்கி லொறியில் கொண்டுவரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் லொறி கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து வாகனத்தில் இருந்து 10 மாடுகள் மீட்கப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ் பண்ணை பகுதியில் 10 மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவில் குறிகாட்டுவான் வரை படகிலும் பின்னர் லொறிமூலம் மாடுகளை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்