யாழில் சட்டவிரோதமாக மாடு வெட்டுபவர்கள் சிக்கினர்

Date:

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடு மற்றும் ஆட்டு இறைச்சி வெட்டும் இடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

குறித்த இடத்தில் நீண்ட காலமாக ஆடு மாடு வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையில் மாடுகளையும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதே வேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்