‘எமது கட்சியில் பல்வேறு நிலைப்பாடுகள் உள்ளன’: டலஸ்

Date:

ஐக்கிய மக்கள் சக்தி உடன் கூட்டணி அமைப்பதற்கான யோசனை தமது தரபபின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவரது குழு உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை குறிப்பிட்டு டலஸ் இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், திலான் பெரேரா, நாலக கொடஹேவ மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் குழுவில் உள்ளவர்கள் பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளனர். ஒரு கட்சி ஜனநாயக முறையில் செயல்படும் போது இது இயற்கையானது. எங்கள் குழுவில் பிளவுகள் உள்ளன, ஆனால் எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

ஏனைய எதிர்க்கட்சிகளிலும் பிளவுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தூய்மையான மற்றும் தமது கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே வரவேற்க வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்