கடந்த நாாளுமன்றத்தில் வடக்கு மாவட்டமொன்றில் ஆளுந்தரப்பு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் பெரும் தொகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் தந்தையும், கைதானவரின் தந்தையும் சகோதரர்கள். நீண்டகாலமாக அரசியல், வர்த்தக உலகில் ஒன்றாக செயற்பட்டவர்கள். நாடாளுமன்ற உறுப்பினரின் வெற்றிக்கு பெருந்தொகை பணம் செலவிட்ட, தந்தையின் சகோதரர், அரசியல் தொடர்புகள் மூலம் வர்த்தகத்தையும் விஸ்தரித்தார்.
யாழ்ப்பாணத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த குடும்பத்தினுடையதே.
என்றாலும், கடந்த பல மாதங்களாக இரண்டு குடும்பங்களும் பகையாளிகளாகி விட்டார்கள்.
இந்த பின்னணியில், கொழும்பில் பெருந்தொகை குஸ் ரக போதைப்பொருளுடன் தமிழ் எம்.பியின் ஒன்றுவிட்ட சகோதரன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



